ஐரோப்பா

கெய்ர் ஸ்டார்மரின் தலைமை ஆலோசகர் மோர்கன் மெக்ஸ்வீனி பதவி விலகினார்!

பிரித்தானிய  பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமை ஆலோசகர் மோர்கன் மெக்ஸ்வீனி (Morgan McSweeney) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான மண்டேல்சனின் உறவை  அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய கோப்புகள் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அவரை அமெரிக்காவிற்கான தூதராக நியமிக்க ஆலோசனை வழங்கியமைக்கு வருத்தம் தெரிவித்து மேற்படி முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கவனமாக சிந்தித்த பிறகு, நான் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். பீட்டர் மண்டேல்சனை நியமித்த முடிவு தவறானது. அவர் நமது கட்சி, நமது நாடு மற்றும் அரசியலின் மீதான நம்பிக்கையை சேதப்படுத்தியுள்ளார்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

அந்த நியமனத்தை செய்யுமாறு பிரதமருக்கு நான் அறிவுறுத்தினேன், அந்த ஆலோசனைக்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெக்ஸ்வீனியின் இராஜினாமாவைக் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!