போரின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ரொக்கெட் லாஞ்சர்கள் கண்டுப்பிடிப்பு!
விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் மூன்று ரொக்கெட் லாஞ்சர்கள் மட்டக்களப்பில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட குறித்த ரொக்கெட் லாஞ்சர்கள் மட்டக்களப்பின் குடும்பிமலை பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது இந்த லாஞ்சர்கள் இனங்காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





