பிரித்தானியாவில் தொடர்ச்சியாக பலத்த மழை – நூற்றுக்கணக்கான வெள்ள அபாய எச்சரிக்கைகள்
பிரித்தானியாவில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பல 82 பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் நிறுவனம் (EA) வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் 253 வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமலில் உள்ளன.
வானிலை முன்னறிவிப்பின்படி, சனிக்கிழமை நாட்டின் பெரும்பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தென்மேற்கு பகுதிகளிலும் தெற்கு வேல்ஸிலும் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை சிறிதளவு மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வு கூறுப்பட்டுள்ளது.
இதனிடையே, 2026 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தென்மேற்கு மற்றும் தெற்கு வேல்ஸில் தினமும் மழை பெய்துள்ளதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் இப்பகுதிகள் வழக்கத்தை விட 50% அதிக மழைப்பொழிவை பதிவு செய்துள்ளன.
மேலும், தென்கிழக்கு இங்கிலாந்து பெப்ரவரி மாதத்தின் முதல் மூன்று நாட்களிலேயே அதன் சராசரி மாத மழைப்பொழிவில் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





