ஐரோப்பா முக்கிய செய்திகள்

UKவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தலுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாது – பரிசீலனையில் உள்ள சட்டம்!

2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிட்டத்தட்ட 60,000 சட்டவிரோத குடியேறிகள் மற்றும் குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக உள்துறை  அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது முந்தைய 19 மாதங்களுடன் ஒப்பிடும்போது 45 சதவீதம் அதிகமாகும், கூடுதலாக 43,000 பேர் தாமாக முன்வந்து வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சட்டவிரோத குடியேறிகள் ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டை (ECHR) பயன்படுத்தி நாடு கடத்தலுக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் நடவடிக்கையை தடுக்க புதிய சட்டத்தை கொண்டுவரவும் இங்கிலாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சட்டப்பிரிவு 03, 08 ஐ திருத்தியமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வருடத்தின் இறுதிக்குள் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஹோட்டல்களை தடை செய்து அவர்களை இராணுவ முகாம்களுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!