இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுர இந்தியா செல்ல திட்டம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆங்கில இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு AI Impact Summit 2026 பெப்ரவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் டெல்லியில் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி டெல்லி செல்கின்றார்.
இலங்கை தூதுவர் மகிஷினி கொலன்னே இந்த தகவலை உறுதிப்படுத்தினார் எனவும் மேற்படி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாநாட்டில், முன்னணி நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்திய பிரதமரை சந்திப்பாரா என்பது உட்பட பயண நிகழ்ச்சி நிரல் பற்றி மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஜே.வி.பியின் JVP பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இன்று இந்தியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!