இலங்கை செய்தி

மாலைதீவில் இலங்கைக்கு சொந்தமான இரு படகுகள் பறிமுதல்

மாலைதீவின் கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை மீன்பிடி படகுகளை தேசிய கடலோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மாலைதீவு தேசிய கடலோர காவல்படை மற்றும் விமானப்படை  நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையின் போது இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாலைதீவு தேசிய கடலோர காவல்படையினரின் கூற்றுப்படி, வடக்கு மாலைதீவில் உள்ள அலிஃப் கேலாவிலிருந்து சுமார் 109 கடல் மைல் தொலைவில் இந்த மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு படகுகளும் மேலதிக விசாரணைக்காக குல்ஹுதுஃபுஷி துறைமுகத்தில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மாலைதீவின் பிரத்தியேக பொருளாதார வலையத்திற்குள் நுழையும் இலங்கை மீன்பிடி படகுகள் கடல் எல்லைகளை மீறியதற்காக அவ்வப்போது மாலைதீவு அதிகாரிகளால் கைப்பற்றப்படுவது வழமையாகும்.

சில படகுகள் போதைப் பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இரு மீன்பிடி படகுகள் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் மலைதீவு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!