இந்தியா தமிழ்நாடு

அனல் கக்கும் தேர்தல் களம்: 21 ஆம் திகதி வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்!

தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன.

கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் திருநங்கை ஒருவரை வேட்பாளராகவும் நிறுத்த நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களம் களமிறங்கவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் பலத்தைக் காட்டும் விதமாக எதிர்வரும் 21-ம் திகதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, சீமான் தனது பிரச்சார போரை ஆரம்பிப்பார்.

200 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் சீமான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பாதியளவு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டனர்.

குறிப்பாக வில்லிவாக்கம் தொகுதியில் சமூக ஆர்வலரான திருநங்கை ரோஷினி வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார்.

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!