உலகம் செய்தி

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் கைது!

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இஸ்ரேல் ஜனாதிபதிக்கு Isaac Herzog இணையவழிமூலம் கொலை மிரட்டல் விடுத்தார் online death threat எனக் கூறப்படும் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூடவுனைச் Newtown பகுதியைச் சேர்ந்த டார்சி டின்னிங் Darcy Tinning என்பவரே ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் AFP அவரது வீட்டில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வரும் சர்வதேச பிரமுகருக்கு, தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார் என அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இன்று சிட்னி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு Isaac Herzog எதிர்வரும் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆஸ்திரேலியா வருகின்றார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதால் அதற்குரிய தடை உத்தரவையும் பொலிஸார் பெற்றுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!