ஐரோப்பா

UK சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை – மெத்தனமாக செயற்படும் அதிகாரிகள்!

பிரித்தானியாவில் ட்ரோன்கள் மூலம் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிறைநிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளிலும் இந்த விடயத்தில் மெதுவாக செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2024 மற்றும் மார்ச் 2025 க்கு இடையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 1,712 ட்ரோன் ஊடுருவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள கைதிகளில் சுமார் 50 சதவீதம் பேர் போதைப்பொருள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தேசிய தணிக்கை அலுவலகம்  எடுத்துக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிறைச்சாலை அமைச்சர் லார்ட் டிம்ப்சன் (Lord Timpson), சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதை ஒப்புக்கொண்டுள்ளார்.

குறைந்த முதலீடு மற்றும் மரபுவழி அமைப்பு தோல்விகள் காரணமாக இவ்வாறான ஒரு நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!