லார்ட் மண்டேல்சன் இங்கிலாந்திற்கு துரோகம் இழைத்துள்ளார் – ஸ்டார்மர் கருத்து!
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான (Jeffrey Epstein) லார்ட் மண்டேல்சனின் ( Lord Mandelson) தொடர்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அவர் இங்கிலாந்திற்கு துரோகம் இழைத்துள்ளதாக பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் ( Sir Keir Starmer) தெரிவித்துள்ளார்.
லார்ட் மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமித்ததற்கு வர்த்தம் தெரிவித்த அவர், தற்போது இருக்கும் அறிவுடன் அவர் செயற்பட்டிருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மண்டேல்சனை பிரிவி கவுன்சிலில் இருந்து (Privy Council) நீக்குவதற்கு மன்னருடன் விவாதித்ததாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை லார்ட் மண்டேல்சன் பிரபுக்கள் சபையிலிருந்து இராஜினாமா செய்திருந்தாலும், அவர் தொடர்ந்து தனது பட்டத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி





