UKவில் தடம் புரண்ட ரயில் : மாற்று வழியை பயன்படுத்த அறிவுரை!
இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் சிக்கனல் பிரச்சினை மற்றும் ரயில் தடம் புரண்டதன் காரணமாக இன்று ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இந்நிலையில் சேவைகள் தாமதமடையும் எனவும், மாற்று வழிகளை பின்பற்றுமாறும் ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தென்கிழக்கு லண்டனின் செல்ஹர்ஸ்டில் (Selhurst) உள்ள ஒரு டிப்போவிற்குள் ரயில் தடம் புரண்டதுடன், லண்டன் பிளாக்ஃப்ரியர்ஸ் (Blackfriars) மற்றும் நோர்வுட் சந்திப்புக்கு இடையே சிக்னலில் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய லண்டன் பிரிட்ஜ் ( London Bridg) மற்றும் ஈஸ்ட் கிரின்ஸ்டெட் ( East Grinstead), ஆர்பிங்டன் (Orpington) – லூட்டன் (Luton), பிரைட்டன் (Brighton ) – கேம்பிரிட்ஜ் (Cambridg) , மற்றும் பெட்ஃபோர்ட் (Bedford) மற்றும் 03 பாலங்களுக்கு இடையேயான பாதைகளில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





