அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கம் தொடங்கிய முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி !
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் $1.2 டிரில்லியன் பெறுமதியான நிதி சட்டமூலத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
இதன்மூலம் வார இறுதியில் கூட்டாட்சி அரசாங்கம் தொடங்கிய வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது.
217-214 வாக்குகளுடன் குறித்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், சட்டமூலம் அமெரிக்க மக்களுக்கு ஒரு பெரிய வெற்றி” என்று கூறியுள்ளார்.





