ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்திரிக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இதனை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று 05 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், புதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.





