காசநோய் பரவல் – கலிபோர்னியாவில் மூடப்பட்ட பிரபல பாடசாலை!
கலிபோர்னியா மாநிலத்தின் தலைநகர் சான் பிரான்சிஸ்கோவில் (San Francisco) உள்ள ஆர்ச்பிஷப் ரியோர்டன் (Archbishop Riordan) உயர்நிலைப் பாடசாலை வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
காசநோய் பரவல் காரணமாக ஏராளமான மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வரும் 09 ஆம் திகதிவரை நேரடி கற்றல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் பிறகு எதிர்மறையான சோதனை முடிவுகள் உள்ளவர்கள் மட்டுமே பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த வெடிப்பால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





