எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் – ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமிந்திர ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நிலையில் அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கத்தின் போது ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் பல மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரான்ஸைத் தளமாகக் கொண்ட எயார் பஸ் நிறுவனம் சுமார் 16.84 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்க இணங்கியமை தெரியவந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த ஊழலில், ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்க ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





