அரசியல் இலங்கை செய்தி

ரணில், நாமல் சங்கமம்? மொட்டு கட்சி மறுப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் UNP ஒன்றிணையவுள்ளன என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP நிராகரித்துள்ளது.

கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இரு தரப்பு இணைவு தொடர்பில் மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்திடம் Sagara Kariyawasam கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பவற்றுக்கிடையில் கொள்கை வேறுபாடுகள் உள்ளன.

எனவே, கொள்கையை ஏற்கும் எந்த தரப்பாக இருந்தாலும் இணைந்து செயல்படலாம். கொள்கையை ஏற்க மறுப்பவர்களுடன் கூட்டணி கிடையாது”- எனவும் Sagara Kariyawasam கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைக்கும் முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில், நாமல் தரப்புடன், ரணில் அணி இணைந்து செயல்படும் என தகவல் வெளியான நிலையிலேயே அது தற்போது மறுக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!