செய்தி விளையாட்டு

டி20 தொடர் – இங்கிலாந்து அணிக்கு 190 ஓட்டங்கள் இலக்கு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அந்தவகையில், பல்லேகல(Pallekele) மைதானத்தில் முதலாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில், குசல் மெண்டிஸ்(Kusal Mendis) 32 ஓட்டங்களும் பதும் நிசங்க(Pathum Nissanka) 34 ஓட்டங்களும் பவன் ரத்நாயக்க(Pavan Rathnayake) 40 ஓட்டங்களும் குவித்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில், ஜோப்ரா ஆர்ச்சர்(Jofra Archer) இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!