உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடைசி நபரும் வைத்தியசாலையில்!
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடைசி நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளாக பாடசாலைகளில் கற்பித்து வரும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளக் கோரி, இலங்கை பள்ளி மேம்பாட்டு அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியது.
ஏழு நாளாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை.
இதற்கிடையே நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டத்தை நடத்தப்போவதாக இலங்கை பள்ளி மேம்பாட்டு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





