உலகம்

அமெரிக்காவில் குறைந்தது 59 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

அமெரிக்காவில் நிலவும் அடந்த மூடு பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 59 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் (California) பேக்கர்ஸ்ஃபீல்டிற்கு (Bakersfield) வடக்கே உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கடுமையான மூடுப்பனி நிலவுவதாகவும், ஆகவே அப்பகுதியூடாக பயணம் செய்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்து தொடர்ந்து கோல்டன் ஸ்டேட் (Golden State) நெடுஞ்சாலை முழுவதுமாக மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரிகள் மற்றும் அவசர பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த கோர விபத்து தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!