ஸ்பெயினில் காணாமல் போன பிரபல கோல்ப் வீரரின் வெண்கல சிலை துண்டு துண்டாக மீட்பு
வடக்கு ஸ்பெயினின்(Spain) கான்டாப்ரியா(Cantabria) பகுதியில் உள்ள பெட்ரெனாவிலிருந்து(Petrerna) காணாமல் போன மறைந்த கோல்ஃப் வீரர் செவ் பாலேஸ்டெரோஸின்(Chev Ballesteros) வெண்கல சிலை மீட்கப்பட்டுளள்து.
குறித்த வெண்கல சிலை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போது துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர்வாசிகள் மற்றும் ரசிகர்களுக்கு குறிப்பிடத்தக்க உணர்ச்சிபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இந்த வெண்கல சிலையின் மதிப்பு சுமார் 30,000 யூரோக்கள் ($35,820) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலையின் உடல் மற்றும் தலை அப்படியே இருந்தபோதிலும், கைகள் பல துண்டுகளாக உடைக்கப்பட்டிருந்தன.
ஸ்காட்லாந்தின்(Scotland) செயிண்ட் ஆண்ட்ரூஸில்(St. Andrews) 1984ம் ஆண்டு பிரிட்டிஷ் ஓபன்(British Open) வெற்றியைக் கொண்டாடும் தோரணையில் பாலேஸ்டெரோஸை சித்தரிக்கும் 100 கிலோ எடையுள்ள சிலை 2009ம் ஆண்டில் சிற்பி சால்வடார் கார்சியா செபாலோஸால்(Salvador Garcia Ceballos) உருவாக்கப்பட்டது.





