பிரித்தானியாவில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசர எச்சரிக்கை!
பிரித்தானியாவில் பருவக்கால காய்ச்சல் அதிகரித்து வருகின்ற நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் காய்ச்சல் தடுப்பூசியைப் பெற வேண்டும் என்று முன்னணி மருத்துவ அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சராசரியாக தினமும் 3,140 காய்ச்சல் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாக தேசிய சுகாதார சேவையின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவத்துள்ளன.
இது முந்தைய இரண்டு ஆண்டுகளை விட அதிகமாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான காய்ச்சலுக்கு ஆளாகுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மகப்பேறு மருத்துவக் கல்லூரி, ரோயல் மருத்துவக் கல்லூரி மற்றும் ராயல் குழந்தை மருத்துவக் கல்லூரி ஆகியவை தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வலியுறுத்துகின்றன.





