போண்டி கடற்கரை தாக்குதல் – நீண்டகாலமாக திட்டமிட்ட தாக்குதல்தாரிகள் : புதிய ஆவணம் வெளியீடு!
போண்டி கடற்கரை தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிதாரிகள், “டென்னிஸ் பந்து குண்டு” மற்றும் பிற வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாகவும், படுகொலைக்கு பல வாரங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு பயிற்சி எடுத்துக்கொண்டதாகவும், புதிய நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
நியூ சவுத் வேல்ஸின் கிராமப்புறத்தில் நவீத் அக்ரம் “துப்பாக்கிப் பயிற்சி” நடத்தி அதை காணொளியாக பதிவு செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரியான நவீத் அக்ரம் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி ஊடாக இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போதே புதிய ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
இருவரும் “நுணுக்கமாக” பல மாதங்களுக்கு முன்பிருந்தே தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்துள்ளதாகவும், உளவு பார்க்க இரண்டு நாட்களுக்கு முன்பு போண்டி கடற்கரைக்கு சென்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனையோரின் பாதுகாப்பு கருதி சில தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை எனக் கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





