செய்தி விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்த சுற்றுப்பயணத்தின் டி20 தொடரின் ஐந்தாவது போட்டி அகமதாபாத்தில்(Ahmedabad) நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

அந்தவகையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 231 ஓட்டங்கள் பெற்றது.

இந்திய அணி சார்பில், திலக் வர்மா(Tilak Verma) 73 ஓட்டங்களும் ஹர்திக் பாண்ட்யா(Hardik Pandya) 63 ஓட்டங்களும் சஞ்சு சாம்சன்(Sanju Samson) 37 ஓட்டங்களும் பெற்றனர்.

இந்நிலையில், 232 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில், டி காக்(De Kock) 68 ஓட்டங்களும் டெவால்ட் பிரேவிஸ்(Dewald Brevis) 31 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி அணியை 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.

மேலும், போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யாவும்(Hardik Pandya) தொடரின் நாயகன் விருதை வருண் சக்ரவர்தியும்(Varun Chakravarthy) வென்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!