257,000 குடும்பங்களுக்கு 25,000 ரூபா மானியம் வழங்கப்பட்டுள்ளது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட 25,000 ரூபா மானியம்,பாதிக்கப்பட்டுள்ள 493,000 குடும்பங்களில் 257,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் இன்று (19.)இதனைத் தெரிவித்தார்.
மொத்த ஒதுக்கீட்டான 17.6 பில்லியன் ரூபாவில் இதுவரை 6.4 பில்லியன் ரூபா செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புயலால் 610,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 493,000 குடும்பங்கள் 25,000 ரூபா முதற்கட்ட மானியத்தைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் அனைத்து கொடுப்பனவுகளையும் விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.





