கொட்டாஞ்சேனையில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் பலி
கொட்டாஞ்சேனை 6 ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடையொன்றிற்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்த நபரைக் இலக்குவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





