ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் லூவ்ரே அருங்காட்சியகம் (Louvre Museum)!

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியக  (Louvre Museum)  ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த நடவடிக்கை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் பலர் ஆதரவாக  வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த அருங்காட்சியகம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியத்தில் அண்மையில்  இடம்பெற்ற மோசமான கொள்ளை சம்பவம், பாதுகாப்பு அச்சுறுத்தல், நீர் கசிவு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையை  முன்னெடுத்துள்ளனர்.

கலாச்சார அமைச்சக அதிகாரிகள் இந்த வாரம் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

இதன்போது திட்டமிடப்பட்ட நிதி குறைப்பை இரத்து செய்யவும், ஊழியர்களுக்கான புதிய ஆட்சேர்ப்பைத் தொடங்கவும், இழப்பீட்டை அதிகரிக்கவும் முன்மொழிந்திருந்தனர்.

இருப்பினும் அமைச்சகம் முன்மொழிந்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என தொழிற்சங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையிலேயே வேலைநிறுத்த நடவடிக்கையை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!