தமிழகம் செல்லும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – முக்கிய சந்திப்புகளுக்கு ஏற்பாடு
இலங்கை மீது சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்த இவ்வாரம் சென்னைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு “ஏக்கிய இராச்சிய“ அரசியல் அரசியலமைப்பை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டு வருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது.
இந்நோக்கத்திற்காக தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இவ்விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக்களில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.





