கொழும்பில் வேன் ஒன்றில் மோதி 05 வயது குழந்தை உயிரிழப்பு!
கொழும்பில் உள்ள மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 5 வயது குழந்தை வேன் ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளது. குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சாலையை நோக்கி ஓடியபோது, இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் குழந்தைக்கு மேலோட்டமான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சிறிது நேரத்தில் இரத்த வாந்தி எடுத்ததால், வேன் ஓட்டுநர் அவரை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் 50 வயது வேன் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.





