சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது இனவாதத்தை விதைப்பார்கள் – பிரசன்ன ரணதுங்க
சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப்போராட்டத்திற்குத் தயாராகும், அதுவும் தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இன்று (2) ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டை அராஜகம் செய்யும் இவ்வாறான குழுக்களுக்கு எதிராக யார் மூக்கை நுழைத்தாலும் பொருட்படுத்தாது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெறுப்புப் பேச்சுக்களை பரப்பி மக்களை அடைத்து வைக்கும் நபர்களுக்கும் குழுக்களுக்கும் எதிராக மக்கள் கிராம மட்டத்தில் நிற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி உடுகம்பொலவில் உள்ள தனது வீட்டை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் இதற்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.