காஸா மனிதாபிமான உதவி – இஸ்ரேலுக்கு ஐ.நா. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

காஸாவில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை இலகுபடுத்த வேண்டிய கடமை இஸ்ரேலுக்கு உண்டு என ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றம் (ICJ) உத்தரவிட்டுள்ளது.
பலஸ்தீனர்கள் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான தேவைகளையும் இஸ்ரேல் பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நிலவரம் குறித்து ஆலோசனை ரீதியான கருத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், காஸா பகுதிக்குள் உணவு, நீர், மருந்துப் பொருட்கள் மற்றும் பிற அடிப்படை உதவிகள் தடையில்லாமல் செல்வதற்கு இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டை நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நீதிமன்றக் கருத்தை நிறைவேற்ற வேண்டிய சட்ட ரீதியான கடப்பாடு இஸ்ரேலுக்கு நேரடியாகக் கிடையாது.
எனினும், சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு நாடாக, நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்றும் தார்மீக கடப்பாடு அந்நாட்டிற்கு உண்டென நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.