இலங்கை

இலங்கை சபாநாயகருக்கு பலப்பரீட்சை!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெகுவிரைவில் கையளிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா  தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது . அது முடிவடைந்த பின்னர் தர்க்க ரீதியாக பிரேரணை முன்வைக்கப்படும்.” எனவும் அஜித் பி பெரேரா  குறிப்பிட்டார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் நிராகரித்தமை உட்பட மேலும் சில காரணங்களை அடிப்படையாகக்கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

அத்துடன், தற்போதைய சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் எனவும் அஜித் பி பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்