பொழுதுபோக்கு

பாகுபலி நாயகனுக்கு வில்லனாக நம்ம கமல்!! சம்பளத்தை கேட்டால் வாயடைத்து போவீர்கள்

தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கமல்ஹாசன். புது புது தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் கமலையே சேரும்.

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசனின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அப்படத்துக்கு பின்னர் தன் சம்பளத்தை ரூ.100 கோடிக்கு மேல் உயர்த்திவிட்டார் கமல்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு டோலிவுட்டில் இருந்து பிரம்மாண்ட வாய்ப்பு தேடி வந்துள்ளது. டோலிவுட்டில் தற்போது பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புராஜெக்ட் கே. நாக் அஸ்வின் இயக்கிவரும் இப்படத்தில் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

புராஜெக்ட் கே படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க, நடிகர் கமல்ஹாசனை அணுகி உள்ளதாம் படக்குழு.

See also  தளபதி 69 கதாநாயகியை அறிவித்த படக்குழு.. மறுபடியும் இவங்களா?

கமலுக்கு கதை பிடித்துப்போக, அதில் அவர் நடிக்க கேட்ட சம்பளம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

அதன்படி புராஜெக்ட் கே படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க ரூ.150 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம் கமல். இதன்மூலம் காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்துள்ளார் கமல்.

gh

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content