உலகம்

ஆர்ஜென்டினாவில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்கள் – நேரலையில் ஒளிபரப்பு!

அர்ஜென்டினா போதைப்பொருள் கும்பலால் மூன்று இளம் பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதனை இன்ஸ்டாகிராமில் காணொளியாக பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த காணொளியை சுமார் 45 பேர் பார்த்ததாக கூறப்படுகிறது.

பிரெண்டா டெல் காஸ்டிலோ, மொரேனா வெர்டி மற்றும் லாரா குட்டியர்ரெஸ் ஆகியோர் வெள்ளிக்கிழமை காணாமல் போயிருந்த நிலையில்   பியூனஸ் அயர்ஸின் தெற்கு புறநகரில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் உடல்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ஜேவியர் அலோன்சோ கூறினார்.

போதைபொருள் கும்பல் என்று அறியாமல் அவர்கள் ஒரு வாகனத்தில் ஏறி பயணிப்பதை சிசிரிவி காணொளிகள் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பின் கொலை செய்யப்பட்டது காணொளியாக எடுக்கப்பட்டு பதிவேற்றப்படவில்லை. மாறாக நேரலையில் ஒளிபரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!