சீனாவில் சிறுவர்களின் உணவில் ஈயம் – 200 பேர் மருத்துவமனையில் – அதிர்ச்சியில் பெற்றோர்

சீனாவின் ஒரு பாலர் பாடசாலை கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் ஈயம் கலந்திருந்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் இரத்தத்தில் ஈயத்தின் அளவு அத்துமீறியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அந்த பாடசாலையில் வழங்கப்பட்ட உணவுகளை உண்ந்த பிள்ளைகள் வயிற்று வலி, வாந்தி, அலட்சிய நிலை போன்ற உடல் குறைபாடுகளை அனுபவித்தனர். சிலரின் பற்கள் கருப்பாக மாறியதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, குற்றச்சாட்டுகள் உருவாகிய நிலையில், பாடசாலையின் தலைமையாசிரியர் உட்பட 6 பேருக்கு தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, உணவில் கலக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் நச்சுத்தன்மையுடையவையாக இருப்பதும், அவற்றின் அளவு சீனாவின் தேசிய பாதுகாப்பு அளவை விட சுமார் 2,000 மடங்கு அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
உணவுக்கு நிறம் கூட்டுவதற்காகவே இந்த ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 200 பிள்ளைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பள்ளி உணவின் தரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை பறித்துப் பல்வேறு அளவிலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.