வாழ்வியல்

நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் ஆபத்து – எச்சரிக்கும் மருத்துவர்

கெட்டுப்போன உணவைச் சாப்பிட முடியுமா என்று கேட்டால், “கண்டிப்பாக மாட்டோம், எவ்வளவு பசியாக இருந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வோம்” என்பதுதான் அனைவரின் பதிலும். ஆனால், தெரியாமல் சிலர் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இது உண்மைதான்.

நிறைய பேருக்கு நகம் வளர்க்கும் பழக்கம் உள்ளது. குறிப்பாக, இன்றைய தலைமுறையினர் இரு கைகளிலும் நகங்களை நீளமாக வளர்த்து, அழகாக நெயில் பாலிஷ் போடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல், சிலர் டென்ஷனாக இருக்கும்போது, பதட்டமாக அல்லது கோபமாக இருக்கும்போது நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது. இவர்களுக்கு என்ன நடக்கிறது தெரியுமா? நாம் சாப்பிடும்போது, வலது கையைப் பயன்படுத்துகிறோம். அப்போது, நகங்களை நாம் சரியாகச் சுத்தம் செய்ய மாட்டோம். உண்ணும் உணவின் சிறிய துகள்கள் நமது நகங்களில், குறிப்பாக உட்புற நகங்களில் படிந்துவிடும். நாம் வெளிப்புறமாக எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும், உட்புற நகங்களில் படிந்திருக்கும் அழுக்குகள் முழுமையாக நீங்காது.

அப்படியானால் என்ன நடக்கும்? நாம் சாதாரணமாகக் கைகளைக் கழுவிவிட்டு உணவை உண்ணும்போது, நகங்களில் படிந்திருக்கும் அந்தச் சிறிய உணவுத் துகள்கள் மற்றும் அதனுடன் கலந்திருக்கும் கிருமிகள் நமது உணவு குழாய்க்குள் சென்று பாக்டீரியா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கிறார் டாக்டர் விஜி.

எனவே, நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களும், நகங்களை நீளமாக வளர்க்கும் பழக்கம் உள்ளவர்களும் தயவுசெய்து உங்கள் நகங்களைச் சரியாக வெட்டி, சுகாதாரமாகப் பராமரிப்பது மிகவும் அவசியம். இது உங்களை அறியாமல் நீங்கள் கெட்டுப்போன அல்லது சுகாதாரமற்ற உணவை உட்கொள்வதைத் தடுக்கும் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் விஜி.

 

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான
Skip to content