இலங்கை செய்தி

இலங்கை: பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்

பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான், ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில், பொலிஸாருக்கும் பௌத்தக் கொடிகளை ஏற்றி வைத்திருந்த ஒரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன்போது ஏற்பட்ட உரையாடல் தீவிரமடைந்ததை அடுத்து, அந்தக் குழு பொலிஸாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குழுவொன்று லொறி ஒன்றில் ஏறி பௌத்தக் கொடிகளை ஏற்றியவாறு இருந்தபோது, பொலிஸார் வீதியை மறைக்க வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்திய பின்னர் இந்தச் சம்பவம் ஏற்பட்டது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை