இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரத்தின கற்களுடன் சீன பிரஜைகளான தந்தை,மகள் கைது

ஒருகோடி 74 இலட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள இரத்தினக் கற்களை கடத்த முயன்றதற்காக, சீன பிரஜையும் அவருடைய மகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, திங்கட்கிழமை (13) இரவு கைது செய்யப்பட்டள்னர்.

தங்களுடைய உள்ளாடைகளில் இரத்தினக் கற்களை மறைத்து சீனாவுக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர்

சீனாவைச் சேர்ந்த 45 வயதான தந்தைக்கு அவருடைய 21 வயதான மகளுக்கு 21 வயது. இந்நாட்டில் வசிப்பதற்கான குடியிருப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் சுற்றித் திரிந்து வணிக நடவடிக்கைகளில் இவ்விருவரும் ஈடுபட்டுள்ளனன​ர்.

அவர்கள் இருவரும் திங்கட்கிழமை (13) இரவு 7:30 மணியளவில் சீனாவின் சோங்கிங் நகருக்குபுறப்படும் சோங்கிங் ஏர்லைன்ஸ் விமானம் OQ-2394 இல் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவர்களின் உடல்களை ஸ்கேன் செய்தபோது, ​​அவர்கள் மறைத்து வைத்திருந்த இரத்தினக் கற்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரத்தினங்களில் சந்திரகாந்தி, கோமேத, அரனுல், வைரோடி மற்றும் பச்ச வகைகளைச் சேர்ந்த 689.5 கிராம் ரத்தினங்கள் இருந்தன.

​அதன்பின்னர், அவ்விருவரிடமும், செவ்வாய்க்கிழமை (14) மதியம் வரையிலும் சுங்க விசாரணை நடத்தப்பட்டது, அதன்பின்னர் ரத்தினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் என்றடிப்படையில், இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்