8,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தென் கொரியா

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 8,000 இலங்கையர்களுக்கு தென் கொரிய வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
தென் கொரியாவிற்கு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் 16 நாடுகளில், இலங்கையிலிருந்து உயர் திறன்களைக் கொண்ட தரமான தொழிலாளர்களை அனுப்புவதற்கு எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
தென் கொரியாவில் வேலைக்காகச் செல்லும் 96 இலங்கையர்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
(Visited 18 times, 1 visits today)