இலங்கையில் இளம் தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு! கணவர் மரணம்
நேற்று (24) இரவு வெல்லவ, மரலுவாவ பகுதியில் உள்ள தம்பதிகள் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கணவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார்.
தம்பதியினர் உடனடியாக குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 32 வயதான கணவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மரலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
30 வயது மனைவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தம்பதியினர் அப்பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. குற்றவாளியைக் கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)