இந்தியா

இந்தியாவில் அரிசி திருடியதாக 50 வயது தலித் நபர் ஒருவர் அடித்துக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தில் அரிசி திருடியதாக 50 வயது தலித் நபர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.அந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைதாகக் கூடும் என்று காவல்துறை தெரிவித்தது.அவர் மீது குற்றம் சாட்டிய கும்பல், அவரைத் தூணில் கட்டி வைத்து அடித்துக் கொன்றதாக அது குறிப்பிட்டது.

“துமர்ம்பள்ளி கிராமத்தில் உள்ள வீரேந்திர சிதார் என்பவரது வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) காலை, பூனி ராம் என்பவரின் மகன் பன்ச் ராம் சாரதி, திருடும் நோக்கத்துடன் நுழைந்ததாக தகவல் கிடைத்தது. அவர் பிடிபட்டு தாக்கப்பட்டார். இதனால் அவர் இறந்தார்,” என்று பிலாஸ்பூர் ரேஞ்ச் காவல்துறை ஆணையர் சஞ்சீவ் சுக்லா கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே, பலியானவர் திருடியதாக குற்றம் சாட்டிய கும்பல் அவரை கயிற்றால் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்றதாக ராய்கர் மாவட்டத்தைச் சேர்ந்த மானிட உரிமைகள் ஆர்வலரான பிரசாத் சவுகான் என்பவர் குற்றம் சாட்டினார்.

ராய்கரில் திருட்டுக் குற்றத்திற்காக தலித் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது இது முதல் சம்பவம் அல்ல. முன்னதாக ராய்கர் மாவட்டம் லயிலுங்கா காவல் நிலையத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த அரவிந்த் சாரதி என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். அப்போது மாவட்ட அமர்வுகளும் சிறப்பு நீதிபதியும் புலனாய்வுத் துறை விசாரணை நடத்துமாறு சத்தீஸ்கர் அரசை எச்சரித்திருந்தனர் என்று அவர் கூறினார்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே