மில்க் நடிகையிடம் மயங்கிய ஸ்டார் நடிகர்.. அக்கட தேசத்திற்கு தப்பி ஓட்டம்
சினிமா கலாச்சாரத்தை பொருத்தவரைக்கும் திருமணத்தை மீறிய உறவு என்பது சகஜம் ஆகிவிட்டது.
ஏற்கனவே திருமணமானவர்களை காதலிப்பது, விவாகரத்தான வரை முதன்முறையாக திருமணம் செய்து கொள்வது என எல்லாமே அவர்களது இஷ்டம் தான்.
அப்படித்தான் உச்ச நடிகர் ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ஆன பிறகு காதலில் விழுந்திருக்கிறார்.
அதுவும் அப்போதான் தென்னிந்திய சினிமாவுக்கு அந்த மில்க் நடிகை புதுவரவு. தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகிக்கொண்டிருந்த நேரம்.
உச்ச நடிகருடன் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்திருக்கிறார். உச்சநடிகருக்கு அந்த நடிகையின் மீதிருந்த காதல் இயக்குனருக்கு தெரிந்திருக்கும் போல.
அதுவரை உச்ச நடிகர் நடிக்காத அளவுக்கு அந்த மில்க் நடிகையுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் அளவுக்கு டூயட் பாட்டை வைத்திருக்கிறார்.
நாளுக்கு நாள் நடிகையின் மீதான காதல் உச்ச நடிகருக்கு அதிகமாகிக் கொண்டே போயிருக்கிறது.
ஒரு கட்டத்தில் மில்க் நடிகையிடம் சென்று மனைவியை விவாகரத்து செய்து விட்டு வருகிறேன், உன்னை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறார்.
ஆனால் மில்க் நடிகைக்கு இதில் உடன்பாடு இல்லை. இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என அக்கட தேசத்தில் கரை ஒதுங்கி விட்டார்.
அங்கு ஏற்கனவே விவாகரத்து ஆகி சிங்கிளாக இருந்த ஸ்டார் நடிகர் ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டாராம்.