இந்தியா

இந்தியாவில் வாக்குவாம் முற்றியதில் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் ; நபர் ஒருவர் கைது

கிழக்கு டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் 15 வயதுடைய சிறுவன் தமது எட்டு வயது அண்ணன் மகனுடனும் இன்னொரு நண்பனுடனும் நவம்பர் 19ஆம் திகதி நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்த கோவிலுக்கு மூவரும் சென்றுகொண்டிருந்தபோது, நபர் ஒருவருடன் மோதல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

தற்செயலாகக் கீழே விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட மரணம் என்று ஆரம்பத்தில் இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டது. இருப்பினும், சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் உடன் இருந்த அந்த எட்டு வயது அண்ணன் மகன் அளித்த விவரங்கள் அடிப்படையில் விசாரணை திசை மாறியது.

ஆனந்த் விஹார் காவல் நிலையத்தைச் சேர்ந்த குழு இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளது.

தனக்கும் சிறுவனுக்கும் வாய்ச்சண்டை மூண்டதாக கைதான முகம்மது வாகீல் ஆலம் வக்கில் என்ற நபர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். சிறுவர்கள் சென்றுகொண்டிருக்கும் இடம் குறித்து தான் கேட்டதாகவும் பதிலுக்கு அவர்கள் தகாத சொற்களைச் சொன்னதாகவும் சந்தேக நபர் கூறியதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்து மரத்தால் ஆன கம்பு ஒன்றைக் கையில் எடுத்து சிறுவனின் தலையில் ஓங்கி அடித்ததாக நபர் குறிப்பிட்டார். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரத்தக் கறை படிந்த அந்தக் கம்பு உள்பட தடயவியல் ஆதாரங்கள் யாவும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

(Visited 3 times, 3 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே