பொழுதுபோக்கு

ரஜினி கூலி ஷூட்டிங்கில் கலந்துகொள்வது எப்போது? லோகி சொன்னா சரிதான்

கூலி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

ரஜினிகாந்த் முன்கூட்டியே தனக்கு நடக்க இருக்கும் சிகிச்சை குறித்து கூலி படக்குழுவிடம் தெரிவித்துவிட்டதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினி தவிர்த்து பிற நடிகர், நடிகைகள் நடிக்கும் காட்சியை படமாக்கி வந்தார்.

இதனிடையே ரஜினிகாந்த் மீண்டும் கூலி ஷூட்டிங்கில் எப்போது கலந்துகொள்வார் என்பது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அதன்படி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வருகிற அக்டோபர் 16-ந் தேதி முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூலி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறினார்.

ரஜினி கலந்துகொண்ட பின்னர் படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கூலி திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். கூலி படத்தை முடித்த பின்னர் கைதி 2 பட வேலைகளை தொடங்க உள்ளார் லோகி.

See also  சிகப்பு சேலையில் சிளிர்க்க வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content