மத்திய கிழக்கு

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 22 பேர் பலி, 117 பேர் காயம்

“லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 117 பேர் காயமடைந்துள்ளனர்” என்று லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர் வஃபிக் சஃபா என்பவரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

காசா, லெபனானில் நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதனையொட்டிய நகரங்களில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 117 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிஸ்புல்லாவின் முக்கிய முதலைவர் வஃபிக் சஃபா என்பவரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே வியாழன் அன்று காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 63 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சூழலில், “காசாவில் உள்ள சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது வேண்டுமென்றே இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. அந்நாடு போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை செய்து வருகிறது” என ஐ.நா சார்பில் விசாரணை செய்யும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content