மத்திய கிழக்கு

இஸ்‌ரேலின் ஹைஃபா நகர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா ; பத்து பேர் காயம்

இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபாவை ஹிஸ்புல்லா அமைப்பு பாய்ச்சிய ஏவுகணைகள் உலுக்கின.இதில் பத்து பேர் காயமடைந்ததாக இஸ்‌ரேலிய ஊடகம் அக்டோபர் 7ஆம் திகதியன்று தெரிவித்தது.

ஹைஃபாவின் தென்பகுதியில் உள்ள ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

கடலோரப் பகுதியில் உள்ள ஹைஃபா நகரத்தில் இரண்டு ஏவுகணைகள் வெடித்துச் சிதறியதாகவும் அங்கிருந்து ஏறத்தாழ 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திபேரியாஸ் பகுதியை ஐந்து ஏவுகணைகள் உலுக்கியதாகவும் இஸ்‌ரேலிய ஊடகம் தெரிவித்தது.இத்தாக்குதல் காரணமாகச் சில கட்டடங்களும் சொத்துகளும் சேதமடைந்ததாக இஸ்‌ரேலியக் காவல்துறை கூறியது.

பலருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஹிஸ்புல்லா பாய்ச்சிய ஏவுகணை, ஹைஃபா நகரம் மீது விழுந்து வெடித்துச் சிதறியதைக் காட்டும் காட்சி கண்காணிப்புக் கேமரா ஒன்றில் பதிவானது.

இதற்கிடையே, லெபனான் தலைநகர் பெய்ருட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் உளவியல் பிரிவுக்குச் சொந்தமான இடங்களைத் தனது போர் விமானங்கள் தகர்த்ததாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது,பெய்ருட்டில் இருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக் கிடங்கு ஒன்றையும் அழித்துவிட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

(Visited 2 times, 2 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content