இலங்கை

மக்களுக்காக வேதனமின்றி சேவையாற்றுவேன் – சஜித்

தாம் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர், வேதனமின்றி மக்களுக்காகச் சேவையாற்றவுள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவித சந்தேகமுமின்றி, ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் வரியினூடாக ஜனாதிபதிக்கான வேதனம் பெறுவது தமது எண்ணம் இல்லை.

அவ்வாறானவர்களிடம் இருந்து நாட்டை பொறுப்பேற்றும், இலங்கையைச் சிறந்த தரத்திற்கு முன்னேற்றுவதே தமது இலக்காகும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்