பிரான்ஸில் கணவனால் நரக வாழ்க்கையை வாழ்ந்த பெண் : 50 ஆண்கள் அரங்கேற்றிய கொடூரம்!
கடந்த 2011 ஆம் ஆண்டில் பிரான்ஸை உலுக்கிய ஒரு கற்பழிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தெற்கு பிரான்சை சேர்ந்த டொமினிக் பெலிகாட், என்ற நபர் தனது மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து, மயக்கமடைந்த நிலையில், குறைந்தபட்சம் 50 ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கணினி கோப்பில் 20,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் தாக்குதல்களின் வீடியோக்கள் இருந்தன என்று Le Monde தெரிவித்துள்ளது.
குறித்த 50 ஆண்களில்குற்றம் சாட்டப்பட்டவர்களில் தீயணைப்பு வீரர், பத்திரிகையாளர் மற்றும் சிறைக் காவலர் ஆகியோர் அடங்குவர்.
தான் சிறுவனாக இருந்தபோது ஆண் செவிலியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறும் டொமினிக் பி, “தனது குடும்பம் மற்றும் மனைவியை” எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.