இலங்கை

வரி தொடர்பில் விரிவான தகவல்களை வெளியிடும் இலங்கை அரசாங்கம்!

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26.08) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாக அமைச்சர் கூறுகிறார்.

வரி பாக்கியை வசூலிப்பதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதன்படி,  வரி தொடர்பான அனைத்து தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!