பொழுதுபோக்கு

அஜித் வாங்கிய காஸ்ட்லியான Ferrari sf90 stradale கார்… விலை இத்தனை கோடியா?

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அஜர்பைஜான் நாட்டில் படமாக்கி உள்ளனர். தற்போது ஷூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாரக உள்ளது.

விடாமுயற்சி தவிர குட் பேட் அக்லி படத்திலும் அஜித் கமிட்டாகி உள்ளார்.

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிகர் அஜித் பிசியாக நடித்து வந்தாலும், தனக்கு ரெஸ்ட் கிடைக்கும் நேரங்களில் பைக் ரைடிங் செல்வது, கார் ரேஸ் செல்வது என தனக்கு பிடித்தவற்றை செய்துவருகிறார்.

பைக், கார்கள் மீது அதிக கிரேஷ் உள்ளதால் தன் வீட்டில் புதுப்புது கார் மற்றும் பைக்குகளை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார் அஜித்குமார். அவரின் லிஸ்ட்டில் லேட்டஸ்டாக ஒரு சொகுசு கார் ஒன்று இணைந்திருக்கிறது.

அதுதான் Ferrari sf90 stradale கார். இந்தக்காரை தான் தற்போது சொந்தமாக வாங்கி இருக்கிறார் அஜித். இந்த காரின் விலை ரூ.9 கோடியாம். இதில் 2 பேர் மட்டுமே பயணிக்க முடியும். அந்த Ferrari sf90 stradale காருடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிறது.

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content