செய்தி விளையாட்டு

உலக கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய அணி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது.

பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.

கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர்.

இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதோடு பிரதமர் மோடியுடன் அவர்கள் காலை உணவில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியை சந்தித்ததைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் திறந்தவெளி வாகனத்தில் மும்பையில் நகர் வலம் வரவுள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி